அவள் என் அம்ருதம்-----
• • • • • • • • • • • • • • • • • • • •
உன்
கொலுசுப் பூச்சிகள்
இரவெல்லாம் என்னைக்
கடிக்கிறது கனவில். ....
என் அம்ருதம் .....!
கண்களை அகலத் திறந்து
பட்சிகளின் ஒலிகளின் நடுவே
கொலுசுப் பூச்சிகளால்
என் காது கடிக்கிறாள். ....!
கண்களை கசக்கி
காலையை மயக்கி
என் கையைப் பிடித்து
இழுத்துப் போய் நிலவின்
சங்குக் கழுத்தில் அறுந்து கொட்டிய
வெண் முத்துப் பனித்துளிகளை
காட்டி வியக்கிறாள். ..
ஒற்றைச் சாடிக்குள்
புதுத்தளிர் விரிந்த ரோஜாவை
காட்டி மயக்கிறாள்
என் முகையவிழா மொட்டு ரோஜா !
கனவும் இனிக்கிறது
அவளைக் காதல் கொண்டு
கண்கள் தூக்கமற்று மூச்சு மயங்கிறது
இப்பவும் வருவாள் ......
இன்றும் வருவாள் .......
இரவும் நனைப்பாள்.......
நாளையும் வருவாள் .......
என் கண்களுக்குள்
என் அல்லி முகிழ்..............!
- பிரியத்தமிழ் -