என் விழி திறக்கிறாய்------
• • • • • • • • • • • • • • • • • • •
நீ
அங்கே
சிரிக்கிறாயா ?
என் முற்றத்து
மல்லிகை கமழ்கிறது !
அடிக்கடி
நினைத்துக்
கொண்டிருக்கிறாயா ?
மேகங்கள் தும்மி
சாரல் அடிக்கிறது !
எட்டிப்
பார்க்கிறாயா ?
நிலா என் யன்னல் பக்கம்
காந்தித்து விழிக்கிறது !
இமை வெட்டி
விழி அசைக்கிறாயா ?
என் ஆகாயத்தில்
வானவில் வந்து போகிறது !
ஒரே ஒரு தடவை
என் பெயரை
உச்சரிக்கிறாயா ?
பெரியதொரு
காவியம் பிறக்கிறது !
உன்னை
என் இதயச் சுற்றுச் சவ்வில்
வரைகிறேன்
பெரும் ஓவியன்
எனப் பெயர் பெறுகிறது !
உன் பெயரை
உயிரில் எழுதினேன்
காவியக் கவிஞன்
என விருது கிடைக்கிறது !
தாவிக்
கொய்தன கைகள்
உன் சேலையெங்கும்
முள் வேலி
ரோஜாக்கள் சிரிக்கிறது !
குத்திக்
கிழிக்கிறாய்
மனம் உடைந்து
இரத்தப் பெருக்கு !
நீ
எனக்காக
அழுதாயாமே. ...
அது பெருக்கு
நிற்கவே இல்லை. ...!
கனவு
வருவதற்காக எனினும்
கண்கள்
உறக்கம் தேடுகிறது !
மூடிய விழிகளை
நீ தான். ..நீ தான். ......
வந்து திறக்கிறாய்
கனவிலா...இதுவெலாம். .....?
- பிரியத்தமிழ் -
-12.02.2016 _ 12.00