காலம் கடந்த உண்ர்தலில்------

• • • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
தடக்கி வீழ்ந்து சிதறிக் கொட்டிய
வெட்டுக் கற்கண்டுகள் போல
வானம் மேகமூட்டத்துடன்
மோதுண்ட கணம்
உடைந்து கொட்டிய
வெண் மேகத்தாரைகள்..!
இந்த பொல்லாத காற்று
சீண்டிப் பார்த்து
ஒரு மயிர்க்கூச்செறிதலிலும் மிஞ்சி
உச்ச குளிர்ச்சியில்
கதிர்களை பீய்ச்சி பிறந்த
வெள்ளைச் சூரியனின்
முழு உஷ்ணத்தில் முயங்கி
இன்னும் மயங்கிக் கிடந்த
இந்த பனிப்பாறை நடுவில்
ஏதோ ஒரு நுனி அரும்பிய
தளிர்த்தலில்
ஓர் இளவேனில் என்பது
கருகும் சுடர்களின்
இறுதி தருணங்களில் ஒளிர்ந்து அணையும்
உச்ச கட்ட ஒளிர்த்தலில்
உணர்த்தும் !
அந்தப் பூச்சிய கணத்தின்
ஆரம்பத்தில் என் மூச்சுக்காற்றின்
வெற்றிடங்களை
உன் இதய சுத்தியின் பரிணாமத்தின்
எல்லையற்ற வான்திரை
மூடிப்போர்க்க தூங்கிக்கிடந்த நான்
மீள எழும்பவே மாட்டேன் என்று
அன்று தான் உணர்வாய். .....!
ஒரே கருப்பையின் சுவர்களை
தடவிய சுகத்தையும்
அதன் நிதர்சனத்தையும்....சேர்த்து !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (16-Feb-16, 5:52 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 162

மேலே