நேரமில்லை------
●●●●● நேரமில்லை ●●●●●
• • • • • • • • • • • • • • • • • • • • • • •
காற்று வீசாதிருக்க நேரமில்லை
கடலலை ஓய்ந்திருக்க நேரமில்லை
விண்மேகம் சாய்ந்திருக்க நேரமில்லை
விடியாமல் இருள் நீண்டிருக்க நேரமில்லை
கதிரவன் கண்கள் முட நேரமில்லை
கார்காலம் வாடை தூவ நேரமில்லை
பூக்கள் புன்னகை மறக்க நேரமில்லை
புல்வெளி பசுமை இழக்க நேரமில்லை
பனித்துளி குளிர்மை தவிர்க்க நேரமில்லை
பசி வயிறு உண்ணாதிருக்க நேரமில்லை
உயிர்ப்பின் வலி உணர நேரமில்லை
இறப்பின் வலி மறக்க நேரமில்லை
காலம் காலமாகாதிருக்க நேரமில்லை
ஞாலம் உயிர்க்காதிருக்க நேரமில்லை
- பிரியத்தமிழ் -