இழ்ந்தும் இறக்காமல்--------
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
சின்னஞ்சிறு ஒரு
இடையூறுக்காய்
நிலா ஒளி போல அகண்ட
என் இதயச் சுற்றுத் தசை
இருண்டு சந்தமற்று
இத்தனை வேகமாய்
நடுங்குகிறது !
இடையறாத
இயக்கத்தை தாண்டி
ஒரு வேகத்தை
காலம் அகாலமாக்கிய
தருணங்களில்
காலாதீத பிரமிப்புக்களோடு
வெல்லத் துடித்தது !l
துயின்று கிடந்த விதையொன்று
சாரல் துமியில் நனைந்து
திடீரென்று விழித்து
முளைகட்டி நின்றது போல
இந்த பழுதடைந்த இதயத்தை
பழுது பார்க்கும் தருணமாய்
முற்றத்து செவ்வரத்தை
இதழ்களை முகையவிழ்த்தி
அற்புதமும் ஏளனமும் கலந்து
சிரிக்கிறது ......!
மயங்கி மருட்டி
களன்று விழும்
அன்றைய அந்தியில்
ஏதோ ஒரு காலமாதலை
அது புகட்டிய மௌனம்
இந்த வெற்றுடம்புக்குள் உயிரின்
இருப்பு எவ்வளவு
இங்கிதம் என்பதை. ...!
- பிரியத்தமிழ் -