என் நிறம் கண்டு விலகிவிடாதே 555

பெண்ணே...

தண்ணீர் இல்லாத ஆற்றை கண்டு
வெறுத்துவிடாதே...

நீ விரும்பி தோண்டினால் உன் தாகம்
தீர்க்கும் ஊற்று அங்கே சுரக்கும்...

தண்ணீர் இல்லாத குளம் என்று
உன் முகம் சுளிக்காதே...

அங்கே மூடி இருக்கும் சேற்றில்தான்
செந்தாமரை மலர்கிறது...

கோடை வெயிலை
வெறுக்காதே...

அப்போதுதான் நீ உணர்வாய்
நிழலின் அருமையை...

மழையை கண்டு
வீட்டுக்குள் நீ ஓடிவிடாதே...

மண்வாசனையை நீ
நுகராமலே போய்விடுவாய்...

என்நிறம் கண்டு நீ விலகாதே
நாளை நீ உலகை ரசிக்க முடியாது...

உண்மையாக நேசி
என்னை அல்ல...

உன் கூந்தலையும்
உன் கருவிழிகளையும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Feb-16, 8:02 pm)
பார்வை : 728

மேலே