அணில் குஞ்சுகளும் பறவைகளும்
நெடிதுயர்ந்த மகுட மரத்தின்
பட்டைகளில் ஏறி இறங்கி
விளையாடிக் கொண்டிருக்கின்றன
விடிகாலைப் பொழுதின்
அணில் குஞ்சுகள் ..
..
அவற்றை வேடிக்கை பார்க்கின்றன
வெளியே இரை தேட போகத்
தயாராகும் பறவைகள் ..
அதே மரத்தின் கிளைகளில் இருந்தபடி
..
அவைகளுக்கு ..
ஆனந்தம் மட்டும்தான்
முப்பொழுதும் ..
..
ஒன்றை மிஞ்ச
இன்னொன்று நினைப்பதில்லை
மிஞ்சும் எதனையும்
அவை இகழ்வதுமில்லை ..
வக்கிரங்கள் இல்லாத
உலகத்தின் பிரஜைகள்
இந்த ..
அணில் குஞ்சுகளும் ..
பறவைகளும் ..!
..
அணில்குஞ்சுகளின் உலகத்தில்
பறவைகளும் ..
அவற்றின் உலகில் இவைகளும்
பிரவேசித்தாலும்
ஆக்கிரமிப்புகள் செய்வதில்லை ..
அதனாலேயே ..
அவைகள் துக்கப் படுவதுமில்லை !