காசன கல்வி

திறமைகள்
இங்கு
மதிப்பெண்கள்
வைத்து
அளக்கப்படுகின்றன
~ கல்வி நிலையங்கள்
மனதில் நிற்க வைப்பது
அன்று கல்வி
மனப்பாடம் செய்வதே
சிறந்த கல்வி
எழுத்தின் மேலே
அக்கறை உள்ள
ஆசிரியர்களுக்கு
எங்கள் தலையெழுத்தின் மீது
ஏனோ அக்கறை இல்லை.....
~ பிரபாவதி வீரமுத்து