வழக்கம் போல

முன் செல்லும்
ஆட்டை
பின்தொடரும் மந்தைகூட்டம் போல
எல்லோருக்கும் பழகி விட்டது
லஞ்சம் கொடுத்து வேலையை முடிப்பது
தேவையற்றதில் தலையிடுவது
பேசியே பிரச்னை வளர்ப்பது
சட்டங்களை சட்ட பண்ணாமல் செல்வது
கருணையின்றி மனங்களை கொள்வது
என
இவற்றை அன்றாட வழக்கமாகி திரியும்
ஜனங்களுக்கு தெரிவதில்லை
மனிதம் மரணித்துக்கொண்டிருப்பது
அவர்கள் அதையும்
வழக்கமாகவே சித்தரித்து விட்டனர்