வேறு நிலாக்கள் 20 ரமேஷாலம்

அம்மாவும்....அணில் குஞ்சும்.
***************************************
அம்மாவைத் தேடி வருகிறது...
அணில் குஞ்சு.

அதற்கு....
வேறு யாரும் பொருட்டில்லை.

தன் இருப்பை....
அம்மாவிற்கு உணர்த்த
கம்பி வலைக்கப்பால்
ஓடி ஆடுகிறது.

இரசிக்கும் அம்மா...
வீசும் நெல்மணிகளை...
நின்றபடியே ....
கொறித்துத் தின்கிறது.

பின்....
யாரும் அறிய முடியாத ஒரு
முகக் குறிப்பில்...
"நாளை" வருவதாய்...
அம்மாவிடம் மட்டும் சொல்லிக்
கிளையேறி ஓடி விடுகிறது..

வீட்டின்....
அம்மாவை அடையாளம் கண்டுவிடும்...
அணில் குஞ்சுகள்...

ஒருபோதும் வருவதில்லை...
அம்மா இல்லாத வீடுகளுக்கு.

***

எழுதியவர் : ரமேஷாலம் (17-Feb-16, 12:05 am)
பார்வை : 148

மேலே