தெய்வமாகிறார்

தெய்வமாகிறார்!

ஐந்து வயது முதல்
படிக்கும் வரை
வழிகாட்டியாகிறார்

பதின்பருவத்திலோ…
அறிவுரைகளால்..
அந்நியமாகிறார்!

திருமண நிச்சயத்தில்
தொலைவில் நிற்கும்
தூணாகிறார்

திருமணமான பின்னே
தொல்லையாகிறார்!

இல்லாத போது
தெய்வமாகிறார்
” அப்பா”

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (16-Feb-16, 8:54 pm)
பார்வை : 80

மேலே