பொழுது போக்கும் ஹைகூக்கள்

கந்தா பாரப்பா
காலம் நிற்கிறது
கற்பூர மரமாய்

*

வேலு உன் கோடரி
வெட்டிச் சாய்த்தது
நூறாண்டு காலம்

*

இதயத் தளம் தேடும்
இணையத் தளம்
கல்யாண.காம் (2014)

*
சாதிச்சண்டை
தீப்பற்றி எரிகிறது
சமத்துவப்புரம்

*
ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறிஆட்டைப் பார்த்தீர்களா?
விடிந்தால் பக்ரீத் (1989)

*

அழாதே கண்மணி
அடுப்பைப் பற்ற வை
குளிராவது காயலாம் (1989)

*

இனி அலையவேண்டியதே இல்லை
இன்றோடு முடிந்தது
என் வேலைவாய்ப்பு வயது (1989)

எழுதியவர் : கவித்தாசபாபதி (18-Feb-16, 12:05 am)
பார்வை : 217

மேலே