என் அன்னையின் காத்திருப்பு

அழகான இரவின் நேரம்
மின்மினிகள் காதலோடு கவிபாடும் நேரம்

காக்கையும் தன் குஞ்சிகளுக்கு உணவூட்டுகிறது
பனைமரத்து கிளிகளும் இன்பத்தில்
முழ்குகிறது

பாதி தேய்ந்த மதியும் என்னை
பார்த்து சிரிக்கிறது
கடலலை ஓசையும் என் வீட்டு
வாசலில் மணலை வாரி இரைக்கிறது

விடாமல் பெய்யும் அடைமழை
என் தொட்டியும் நிரம்புகிறது

இன்றாவது கடலுக்கு சென்ற என்னவர் வருவாரா!!!
என்று தட்டில் சோற்றுடன்
விளக்கின் ஒளியில்
என் அன்னை

எழுதியவர் : சிவா (17-Feb-16, 8:39 pm)
பார்வை : 128

மேலே