இனியதொரு இன்னிசை
யாருமில்லா நீண்ட பாதையிலே,
மரங்களோ சாலை ஓரத்திலே,
அமைதி என்ற நெஞ்சின் நிலையினிலே,
உறங்காத நினைவுகள் பல சிந்தையிலே,
வெண்ணிற மலறொன்றை மலர்ந்திருக்க கண்டேன்,
ஊமையான நெஞ்சம் மலர்தெலும்ப,
வாசம் நுகர அதின் அருகில் சென்றேன்.
மலரினை காணும் கண்கள் கண்டது,
மங்கையின் அழகிய முகத்தில் காணப்படும் பருவினைப்போல,
மழையின் சிறுத்துளி நீர் மலர்மீது,
மனம் அதைக்கண்டு உணரும் முன்னே,
மலமலவென மழை பெண் அவளை நனைத்தது.
புதிதாய் மலர்ந்த மலரின் அழகைப்போல்,
பளிச்சென பெண் மழையின் வாழ்த்தினிலே,
படபடக்கும் நெஞ்சின் ஓசையோடு இணைந்தது,
மேகத்தின் காதலால் உருவான மழையும்,
மழையினை வரவேற்கும் மத்தள இடியும்,
மின்னல் ஒளியும் அவளை வட்டமிட,
மான் போன்று மருளினால்,
மருளிய அவள் நெஞ்சம் மாறி,
மென்மையானல் மழை குறைந்து சாரலான போது,
மழைதந்த இந்த வீழ்ச்சி,
முற்றிலுமாய் வீழ்ந்தேன் இயற்கையின் இசை வழியில் காதலில்,
காதலின் முதிர்ச்சியான கொண்டாட்டத்தில்,
கண்மூடி நடந்தேன்,ரசித்தேன்,
கைநீட்டி மழைசாரலின் உரசலில்,
குளிர்க்காற்றோடு இணைந்து களிப்பின் விளம்பிற்கே,
மெல்லிய மழைத்துளி பெண்ணை தழுவி மண்ணில் விழ,
மண்ணும் துளிர்விட்டு செழித்து மலர்ந்தது சிரிப்போடு,
மிதமான இயற்க்கை அவளை மிதந்திட செய்ய,
மின்னலென சிந்தையிலே அவர் நினைவு உதிக்க,
மயக்கத்தில் தனியே சிரிப்போடு,
மன்னவனின் இனிமையான தவிப்போடு,
மயிலாடும் ஆட்டமாய் அசைந்தாடினால்,
பணிக்காற்றாக மாறிய குளிர்க்காற்று,
பெண் அவளை நடுங்க செய்ய,
போர்வை வந்து மூடியது இதமாக,
பயணத்தில் போர்வையா ? என்று
பார்வையிட,
பாவை பஞ்சு மெத்தையிலே,
போர்த்திய தாயோ அருகினிலே,
கண்டது யாவும் கனவா ?
கனவிலும் அவரின் நினைவா ?
காற்றோடு இயற்க்கை பணிவாய்,
கைசேர்க்கும் ஒருநாள் நிஜமாய்...
இதய கள்வன் இசைத்திட !
இனியதொரு இன்னிசை !!!