அன்பைத்தேடி
எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்....
இருட்டு உலகமிதில்
குருட்டு வாழ்க்கை நடத்தும்
மனிதப் பிறப்புகளைக்கண்டு....!
காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என்றான் அன்றே........!
உதாரணத்திலும் பறவையினத்தை வைத்து
கேடுகெட்ட மனித இனம் இதற்கு
தகுதியற்றது என்றெண்ணி....!!
பாசமென்ற ஏட்டைப் படிக்கத்தவறிய மனிதக்கூட்டமே..........!
பாடம் கற்றுக்கொள்.........
பகுத்தறிவற்ற விலங்கினத்தைக் கண்டாவது...!
பணத்தை வட்டிக்கு விட்டு
பொன் பொருளை சொந்தம்கொள்ளும்
மனிதப்பிறவிகளே..........
உண்மைப் பாசத்தை வட்டிக்கு
விட்டுப் பாருங்கள்.....
இந்த உலகமே உம்மைச் சொந்தம் கொள்ளும்.....!!
-சதீஷ் ராம்கி.