எழுதப்படும் கவிதை
வானத்தின் நீலப்பக்கங்களில்
மேகங்கள் ..
ஊடுருவும் கதிர்கள்
எழுதும் ..கவிதை ..
..
வறண்டு போன வயிற்றோடு
வியர்வை சிந்தி ஓடும்
மனிதர் மனங்களில் ..
எழுதப்படும் கவிதை
..
வலிகளை ..ரணங்களை
தழும்புகளை ..
தடவிப் பார்த்து
வடிக்கின்ற கவிதை ..
..
வம்பிழுக்கவும் வக்கிரம்
வெளிப்படுத்தவும்
புளியேப்ப பெருமூச்சில்
புறப்படும் கவிதை ..
..
புகழுக்கும் பெருமைக்கும்
விலை தந்து வாங்கி
காகிதங்கள் பல
நிரப்பும் கவிதை ..
..
காதலுக்கும் காமத்திற்கும்
ஆன்மாவின் குரலுக்கும்
அலைபாயும்
அத்தனை கவிதை ..
..
என்றே ..மாந்தருடன்
அங்கிங்கெனாதபடி எங்கும்
இயல்பாகவே ..
நிறைந்திருக்கும் கவிதை !