யாரு வீட்ல

ஒரு டெலிபோன் சம்பாஷணை.

"ஹலோ"

"ஹலோ"

"யார் பேசறது"

"நான்தான்"

"நான்தான்னா யார்?"

"நான்தான்னா ரேவதி"

"ரேவதி! அப்பா இல்லையா?"

"இல்லை"

"அம்மா?"

"இல்லை"

"சரி அப்பா வந்தா ராமன் டெலிபோன் பண்ணினதாகச் சொல்கிறாயா?"

"யாரு?"

"ராமன். எழுதிக்கோ ரா-ம-ன்"

"ரா எப்படி எழுதறது?"

"சரிதான்! பாப்பா, வீட்டிலே வேறே ஒருத்தரும் இல்லையா?"

"சேகர் இருக்கான்"

"சரி சேகரைக் கூப்பிடு"

"சேகர் இந்தா" என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக்கொடுக்கிறாள்...

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 9:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே