சாவு என்பது இல்லை என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும், சந்தோசமாக இருங்கள் வேறு வேறு நிலையில், வடிவில்
நாம் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது நம் நிலை என்ன?நாம் கர்ப்பத்தினுள் நுழைந்த முதல் நாளன்று ஒரு Photo எடுக்க முடியுமானால், நம்மால் அந்த சிறிய அணுவை இனம் கண்டு கொள்ள முடியுமா?
நமது முகமோ, மூக்கோ, பார்க்ககூடிய அளவு அடையாளம் உடையதாக எதுவுமே இருக்காது.உயிருள்ள ஒரு செல் மட்டுமே.அதுதான் நாம்.
அந்த ஒன்பது மாதங்களில் நமது வடிவம் மாறிகொண்டு,மாறிகொண்டு மாறிகொண்டே செல்கிறது.பின்பு நமது வாழ்வு முழுவதும் வடிவம் மாற்றம் அடைகிறது.வடிவம் நாள்தோறும் மரணத்தைத் தழுவுகிறது.
வடிவத்துடன் நம்மை இணைத்துக் கொள்ளும் போது பிர்சனை எழுகிறது. 'நான் இந்த வடிவம்' என நினைக்கிறோம். 'நான் இந்த உடல் ' என எண்ணுகிறோம்.அப்போது மரணபயம் தோன்றுகிறது.
சாவு ஒரு பொய்மை.உண்மையில் இந்த உடலில் உனது சுடர் மறைந்துவிடும்.இதுவேறு உடலில் வடிவுபெறும்.வேறு கர்ப்பத்தில் தோன்றுவோம்.இப்படி சென்று கொண்டேயிருந்து பிறவியே இனி இல்லை என்றாகும்போது இறைவனில் மறைந்து விடுவோம்.ஆனால் வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.
"சாவு என்பது இல்லை என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். சாவு என்பது ஒர் அற்புதமான புராணக்கதை".