குடும்ப வண்டி
தனித்துவம் கொண்ட ஆணும்,
தனித்துவம் கொண்ட பெண்ணும்,
பொதுத்துவம் தத்துவம் காண
பூரணமாய் இணைந்த வண்டி - குடும்ப வண்டி!
தனக்காக வாழ்ந்த இருவர்,
தமக்காக வாழ ஒருவராகி,
துணைக்காக உயிரையும் தேடி,
தூரப்பயணம் போகும் வண்டி - குடும்ப வண்டி!
வேறு வேறு பாதைகளில்,
பாதிப்பயணம் கடந்தவர்களை-
மீதமுள்ள வாழ்க்கை பாதையை,
ஓர்பாதையில் ஓட்டும் வண்டி - குடும்ப வண்டி!
அன்பு, கருணை, அமைதி –
சீரான பாதை போலாகும்,
ஆணவம், பொறாமை, கோபம் –
சேராத இடம் சேர்க்கும்!
உருண்டோடும் குடும்ப வண்டியை
உலாவரும் தேர் போலே
உவகையுடன் இட்டுச் செல்வோர்-
உன்னதமான தலைவனும் தலைவியுமே!