ச்சி போடா
இருள்நிறைந்த
இடிக்காட்டில்
என் உடல்
எரி"ச்சி போடா...
முத்தம் என்னும்
தோல்வாளால்
என் இதழ்
உரி"ச்சி போடா...
அடைகாக்கும்
கூட்டத்தினுள் .....
அங்கம் விலகி
ஆடை நின்றால்
என்னை கொஞ்சம்
முறை"ச்சி போடா...
பயணங்கள்
யாவும்
தொடரும்போது
என்னிடம் சிரி"ச்சி போடா...
கருந்தலை
நரைத்த பின்னும்
என்னை கண்ணடிக்கும்
கள்வா....ச்சி போடா...