நாநீ

சூரியனால்
சூரியகாந்தி
தலைநிமிர்ந்திடும்
காதல் நாநீ.....

கருவானில்
விண்மீன்கள்
மினுமினுக்கும்
காதல் நாநீ...

கருங்கல்
சிறுஉளி
வடித்திடும்
காதல் நாநீ...

காகிதம்
பேனா
எழுதிடும்
காதல் நாநீ...

தீக்குச்சி
மெழுகு
ஒளிர்ந்திடும்
காதல் நாநீ...

நான் நீ
சேர்ந்தால்
தமிழ் பெற்றிடும்
புதுக்காதல் நாநீ....

எழுதியவர் : மா.யுவராஜ் (22-Feb-16, 4:42 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 108

மேலே