அன்புதனில் அடைக்கலம்

அடையும் பொழுதில்
முதிர்ந்த கொடியில்
சூரியன் உறங்க பின்
சுடர்விடும் அகழ்விளக்காய் !
அணைத்து ததும்பும் இரு நிலா !!.

வலிகள் கூறும் விழிகள் கொண்ட
விதைகள் இரட்டை
விருட்சமாக்க சுமந்து செல்லும்
உடைந்த விறகின் இருள் உலா.

விடைகள் தேடி நடைகள் போடும் பாதத்திற்கு..
பாதை தெரியுமோ?
செல்லும் தூரம் குறையுமோ?
இந்த துயரம் மறையுமோ?
புது விடியல் விடியுமோ?

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (22-Feb-16, 5:44 pm)
பார்வை : 362

மேலே