பணம் ஓர் பிணம்

பணம் மனிதர்களுக்கு ஓர் அவசியம்

ஆனால் அதுவே ஆடம்பரமாகிவிட்டால்

அது ஓர் பிணம்

பணம் நிறைய உள்ளவனுக்கு

குணம் இருக்காது

நிம்மதி இருக்காது

பணத்தை வைத்து வாழ்க்கையை

சந்தோசமாக அனுபவிக்கலாம்

ஆனால் பாசத்தை விலைக்கு

வாங்க முடியாது

பணத்தை வைத்து இருக்கும் பணக்காரன்

இறக்கும் போது என்ன கிடைக்கிறது

ஒன்றும் இல்லை

அவன் இறந்த பின்னும்

குடும்பத்தில் சண்டை சச்சரவு

வருமே தவிர, நிம்மதி இருக்காது

பணம் நிறைய உள்ளவன் ஓர்

பைத்தியக்காரன், குழப்பவாதி

அவற்றை ஓர் இயலதாவனுக்கு

கொடுத்திருந்தால் கூட

அவன் வாழ்நாள் அதிகரித்திருக்கும்

பணம் அதிகமாக வைத்திருந்தால்

அதுவும் சாம்பல் தான்

அவனும் சாம்பல் தான்

பணம் நாட்டை சீரழிக்கும்

ஓர் குற்றவாளி

அதனை கைது செய்ய இயலாது

பணம், பட்டினி கிடப்பவனுக்கு அது பணம்

பணக்காரனுக்கு அது பிணம்

பணம் பத்து செய்யும் என்பார்கள்

நான் சொல்கிறேன்

பதினொனும் செய்யும்

அது தான் பிணம்

எழுதியவர் : ஹரிமுத்து (15-Jun-11, 5:52 pm)
சேர்த்தது : hari1234
பார்வை : 420

மேலே