வசந்தகீதம்
விண்ணை தொட்டு - சில
வார்த்தைகளை
மண்ணைதொட்டு
விதைக்கிறேன்....
மலர்ந்தால் சரித்திரம்...
மரணித்தால் சித்திரம் !
அழுகிப்போனது - என்
ஆசை விளிம்பு! -
ஆற்றிவிடது -உன்
வார்த்தை எனும் களிம்பு!
முத்திரையும் திறந்து
நித்திரையும் இழந்து
சித்திரையில் பிறந்த
சிலையழகே!-நம்
சிறகடித்த காதலை
சீர்குலைத்த
சிறு அலையே !
காதல் பரவையில்
காணாமல்போன
என் வலையே! - நான்
சிக்காமல் சிதறிவிட்டேன்
தேடி அலைகிறபோது
திரளான மீன்கூட்டம்
கூடி வாழ்கிறபோது
திறவாத வீண்திட்டம்
கடலுக்கும்
மேகத்துக்கும்
கல்யாணம் நடக்கிறது
வருடமெல்லாம் காதலித்த
வர்ணபகவான்
வருந்தி அழுகிறான்
பூமிதேவதை
பூரித்து சிரிக்கிறாள்
அதைப்போலத்தான் -உன்
கண்நீர்க்குள்ளும் - ஒரு
பன்னீர் வாசனை! -ஆம்
உதடு அசைந்தாலே
உரிமைகீதம்
வாய் அசைந்தாலே
எனக்கு வசந்தகீதம்!