எனக்காக பிறந்தாளா 13

Episode 13 : எனக்காக பிறந்தாளா ???

வானில் பாறைகள் உருட்டியது போல் திடிற் சத்தம் . சாரல் தூவி மழையாக மாறியது . மழை மேகம் இருட்டியது நனைந்துக்கொண்டே நடந்தார்கள் . முதலில் டேவிட் தன் சட்டையை கழற்றி தலையில் சுற்றிகொண்டான் . வசந்திற்க்கு அதுபோல் சட்டயை கழற்றி தலையில் கட்டிக்கொள்ள தோனியது . மழையில் கூச்சல் இட்டுக்கொண்டு சுதந்திரமாக நடந்தார்கள் . வீட்டை அடையும் வரை ஆட்டத்தை தொடர்ந்தார்கள் , மணி 8:56 நவீன் வேகமானான் .

" மச்சி நாங்க களம்புறோம் டைம் ஆகிடுச்சு " நவீன் .

" யே ! நைட் stay பண்ணுக்கடா சரக்குலாம் இருக்கு " கோகுல்.

" இல்ல மச்சி சொன்ன இல்ல ஒரு சஸ்பென்ஸ் இருக்குனு " நவீன் .

" சரி ரவியா விட்டு போ டா " டேவிட் .

ரவி " தல arrangement பண்ணதே நான் தா " டேவிட் காதுகளில் மெதுவாக சொன்னான் .
வசந்திற்க்கு என்னவேன்று புரியவில்லை .

" ok bye டா "

வேகமாக இருவரும் பைகளை மாட்டிக்கொண்டார்கள் . அவர்களுடன் நல்ல நட்பு வளர்ந்தது புரிந்தது . பைக் முறுக்கப்படும்போது ஒரு வித சோர்வு உணர்வு மனதில் இருந்தது அது பிரிவினால் உண்டானது போல உனர வைத்தது . பைக் சில மைல் தூரம் கடந்தது . பாண்டிக்கு சில மைல் தூரத்தில் ஒரு இடம் நவீனுக்கு சொந்ததமாக உள்ளது அதன் அழகிய தோற்றத்தை நவீன் பல முறை தன்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது .

" மச்சி உங்க wooden house இங்க தான இருக்கு " வசந்த் .
" உனக்கு நாபகம் இருக்கா அந்த வீட பத்தி நிறைய சொல்லி இருக்க"
" நீ சொல்லி இருக்க, ஒருமுறைகூட கூப்பிட்டுனு போனாது இல்ல , உங்க பரம்பர வீடு awesome architecture அது இதுனு சொல்லுவ, ப்ட் ஒரு முறைகூட காட்டினது இல்ல "
" sure ah nxt tym i will show you "
" இன்னோறு தடவ வரலாம் மச்சி பாண்டிசேரி, உன் friends ரொம்ப பிடிச்சு இருக்கு எனக்கு " வசந்த் .
" இன்னோறு தடவ வரோம் தேனற தேனற சரக்கடிக்குறோம் "
" கண்டிப்பா மச்சி " நவீன் .
" யே ! அவனும் தா குடிக்குறான் உன்ன மாறி யாருனா மட்டையாராங்கள ?? குடிக்க வேணானு சொல்ல மாட்ட ஆனா நீ அளவா குடி next tym இல்ல, அடிதா வாங்குவா "
" என் மச்சான் நீ சொல்லிட இல்ல இனி தொட கூட மாட்ட "
" உடனே scene போடாத " வசந்த் .
வண்டி sudden breakல் நின்றது . வசந்த் வேகமாக நவீன் மீது மோதிக்கொண்டான் .
" யே ! என்னடா ஆச்சு " வசந்த் .
ஹாரன் அடித்தான் தூரதில் திடீரென ஒரு மரவீடு ஓளிவீசியது . ஒரு புதருக்குள் ஒரு எவுகனை இருபது போல ஒரு தோற்றதில் வினோதமாக இருந்தது . வசந்திற்க்கு பிரம்மிபாக இருந்தது .
" ஓய் ! அதா நவீனோட வீடு " ரவி .
" நவீன் செமயா இருக்கு டா " வசந்த் .
" எப்படிடா நீ ஹாரன் அடிச்ச உடனே அங்க லைட் ஏரியுது !!?" வசந்த்.
"அது சஸ்பென்ஸ் மச்சி ! "

Bike-ல் இருந்து மூன்று டார்ச் லைட் எடுக்கப்பட்டது மூவரும் அந்த மூரடான பாதையில் கவனகாக நடந்தார்கள் . வசந்திற்க்கு இந்த புதிர் புரியவில்லை அவர்களிடம் இருக்கும் திட்டம் என்னவேன்று தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது .

" மச்சி பாத்துடா ரொமப riskகான place, பக்கதுல பாம்பு புத்து இருக்கு கீழ பாத்து வாங்க " நவீன் .
" ஏய் ! எனக்கு பாப்புலாம் பல்லி மாறி "
" தூ ! ரொம்ப கேவலமான punch da" .

எதிரில் ஒரு கிணறு சரியான வட்டதில் தண்ணீர் நிறம்பி இருந்தது பளிச்சென்று ஒளிபட்டதில் மூவரும் நீரில் தெரிந்தார்கள் . நீர் இருள் ஒளியில் கூட தூய்மையாக தெரிந்தது வியப்பாக இருந்தது . கீழே தடித்த மரக்கட்டையின் உதவியுடன் மேலே ஒரு வினோதமான மரவீடு பிரகாசமாக மினுத்தது .வசந்திற்க்கு இது எல்லாமே ஒரு கனவில் பயணம் செய்வது போல் அதிசயமாக இருந்தது . நவீன் வேகமாக ஒடி ஒரு வட்டத்தில் குதித்தான் எதோ spring-கில் பட்டது போல் தாவி மேலே இருக்கும் ஒரு top-பை பற்றி ஏறிவிட்டான் . ரவியும் வேகமாக ஒடி அதேபோல் ஏறினான் . வசந்திற்க்கு ஒன்றும் புரியாமல் பார்த்தான் .

"டேய் ! தாவுடா தாவு "
" டேய் ! என்னடா இதலாம் magic காட்டினு இருக்கீங்க "
" ஹ ஹ வா வா ! "
" எனக்கு தெரியல எப்படி மேல வரது " vasanth .
" அந்த circle ah jump பண்ணு " நவீன் .

எதோ ஒரு உணர்வில் முயற்சித்தான் சரியாக top-ஐ பிடித்து மேலே இருக்கும் மரதளத்தில் புதிரோடு நடந்தான் . மரக்கதவுகள் தானாக திறந்தது . திறக்கும் போது மரம் தரையில் தேய்வது போல் சத்தம் கேட்டது . " டும் " வெடி வெடித்து வண்ண ககிதங்கள் மழையாக வசந்தின் மேல் விழுந்தது . ஒரு மேஜை தரை அடியில் இருந்து சுயன்று எழுந்தது . வசந்த் அதிர்ச்சின் உச்சத்தை அடைந்தான் . அந்த அறை முழுவதும் புது புது வினோத எற்பாடுகளை திரையிட மேஜை மேல் cake ஒன்று மெதுவாக எழுந்து நின்றது . சத்தமாக பாடல்களை speaker-il ஒலிக்க .
" wat a miracle place " vasanth .
" happy birthday மச்சி " புன்னகையுடன் ரவியும் நவீனும் .

மணி துளியமாக 12, டிசபர் 28 . வசந்த் பிறந்து இன்னோடு 21 வருடங்கள் இது போல ஒருமுறைகூட தன் வாழ்வில் அதிசயங்களையும் அன்பையும் வசந்த் பார்த்தது இல்லை .ரவி வேகமாக மெழுகுகளை அதில் சொருகினான் . இவை யாவும் தனக்காக நிகழ்த்தபட்டவை என்பது நம்பமுடியாத உண்மையாக இருந்தது . வசந்திற்க்கு ஆனந்த கண்ணீர் மட்டம் தான் வரவில்லை மற்றபடி அன்பாள் பிரமித்து நின்றான் . வெட்டப்பட்டது முதல் ஒரு கடி கேக் கடிக்கும் வரை அவர்கள் பாட்டு பாடி உற்சாகப்படுத்தினார்கள் , பின் இடம் முழுவதும் கேக் இறைந்து பாதிக்கு மேற்பட்ட கேக் வசந்தின் முகத்தில் தடவப்பட்டு வழவழபாக உணரவைத்தது .

" மச்சி ! நானே எனக்கு இன்னிக்கு birthday ந்றத மறந்துட டா, எப்படிடா இதலாம் set பண்ணிங்க ?"

" வரும்போது லைட் எரிஞ்சது இல்ல அதுக்கு ஒரு device இருக்கு அதல rf signle connect பண்ணி ஒரு சஸ்பென்ஸ்காக ரெடி பண்ணோம் , அப்பறம் spring ஒரு thrilling காக நான் தா setபண்ண, கதவு automatic system அது உலகத்துகே தெரியும் , table cake அதலாம் இந்த வீடோட magical architecture , இப்ப நம்ம தமிழ் சினிமா opperation "

அவர்கள் நின்றுக்கொண்டிருந்த plywood கழன்று ஒரு சருக்கு தளத்தில் அவர்கலை இழுத்துக்கொண்டு வீட்டின் கீழ்புறத்தில் தள்ளிவிட்டது " .

தொடரும் . . . By Nishanthu

எழுதியவர் : kavi tamizh Nishanth (24-Feb-16, 9:59 am)
பார்வை : 303

மேலே