தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து23---ப்ரியா

கீதுவின் ஊரில் அமர்க்களமாய் திருவிழா நடந்துகொண்டிருந்தது ஆனால் தோழிகளை நினைத்து நினைத்து கவலையுடன் காணப்பட்டாள் கீது....

விஜய்க்கு வருத்தமாக இருந்தது எவ்வளவோ தேற்றியும் அவள் கேட்பதாயில்லை.....வந்தனா இப்படி பண்ணுவாள் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை பாவம் ரியா எவ்வளவு பாசமாக இருந்தாள் சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவள் தோழி என்பதால் அவள் மீது கொண்ட அன்பால்தான் இத்தனையும் செய்யத்துணிந்தாள் இறுதியில் இவளையே மாட்டிவிட்டுட்டு போய்விட்டாள் துரோகி என் கண்ணுல மாட்டுனா அப்போ இருக்குது அவளுக்கு உண்மையான நட்பு என்றால் என்னவென்று தெரியாதவள் பச்சோந்தி மாதிரி மாறிவிட்டாள் எவனோ ஒருவனுக்காக தன் தோழியை அடமானம் வைத்துவிட்டாளே என்று பொரிந்து தள்ளினாள் கீது.......!

வந்தனாதான் அப்படி செய்தாள்.....நான் எவ்ளோ நேரம் அறிவுரைகூறினேன் கேட்டாளா உன்தோழி ரியா? அனுபவிக்கட்டும் என்று இவனும் கடிந்துகொண்டான்.......எல்லாம் அவளோட தலையெழுத்து தோழி தோழி என்று அவள் பின்னால் சென்றாள் இன்னிக்கு இவள இடையில விட்டுட்டு அவ எங்கோ போய்விட்டாள் என்றான் விஜய்....!

என்னங்க ரியாவை நினைத்தால் ரொம்ப பயமா இருக்குது என்றாள் கீது.....

எனக்கு ரியாவை நினைத்து துளியும் பயமில்லை ஆனால் வந்தனாதான்....... என இழுத்தான் விஜய்..

ஏங்க வந்தனாவுக்கு என்ன ஆச்சி என்று படபடப்புடன் கேட்டாள் கீது??

ரியா வசந்துடன் தான் இருக்கிறாள் அவளை அவன் கஷ்டப்படுத்தமாட்டான் அவன் நல்லவன்....ஆனால் வந்தனா அந்த பிரதீக்கோட இருக்கா அவன் ரொம்ப மோசமானவன் காசுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான் என்றான் விஜய்......

அவளுக்கு கால் பண்ணி பார்க்கட்டுமா என்று கேட்டாள்?

சரி பண்ணு என்று சொல்ல.......வந்தனாவுக்கு கால்பண்ணினாள் "சுவிட்ச் ஆப்".....ரியாவுக்கு கால்பண்ணினாள் அவளுக்கு லைன் கிடைக்கவில்லை தொடர்ந்து முயற்சித்தாள் முடியவில்லை, சோர்வாய் இருந்தாள் திருவிழா முடிந்ததும் நாமே ரியாவை நேரடியாக போய் பார்ப்போமா? என்று விஜயிடம் கேட்டாள்......????

உன் பேச்சைத்தட்டமுடியுமா கண்டிப்பா போலாம் என்று ஆறுதல் படுத்தினான் விஜய்!

காலையில் எழுந்த வசந்த் பக்கத்தில் ரியாவைப்பார்த்ததும் மனதிற்குள் திட்டிக்கொண்டான் முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்றே இவனுக்கு நினைவு இல்லை அவ்வளவு போதையில் வந்திருந்தான்.....ஆனால் இவனது கணக்கில் அவளை நாம் பழிவாங்கியிருக்கிறோம் அவ்வளவுதான் என்று மனதிற்குள் பெருமைபட்டுக்கொண்டான்.

வசந்தின் சிறுகனைப்பில் கண்களை திறந்தாள் ரியா.

மானை வேட்டையாடிய சிங்கத்தின் தோரணையில் எழுந்து நின்றான் அவனை வெறுப்புடன் பார்த்தாள், அருவருப்பாக நினைத்தாள், வேகமாக குளியலறைக்குள் சென்று மனதிலிருந்த கஷ்டங்களும் உடலின் கஷ்டங்களும் மொத்தமாய் கரையும் படி ரொம்ப நேரம் தண்ணீரில் நின்றாள்........

கண்ணீர் ஒருபக்கம் தண்ணீர் ஒருபக்கம் என வடிந்துகொண்டிருக்க வெளியில் வந்தாள்.....அங்கு அவன் இல்லை ஒரு புடவையை கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள் பக்கத்தில் யாரிடமும் பேசமுடியாது பேசினால் நமக்குதான் அசிங்கம் யாரோ ஒருபொண்ணை கொண்டு வைத்துள்ளான் என்று மிகவும் மோசமாக பேசுவார்கள் என்ன செய்வது சாப்பிடவும் எதுவும் இல்லை என்று கீழே வந்தாள் அங்கு டைனிங் டேபிளில் ஒரு பார்சல் இருப்பதை பார்த்தாள்..... அவன்தான் வாங்கி வைத்துவிட்டு சென்றிருக்கிறான் என்றவள் அருகில் வந்து...
அதை பிரித்து எடுத்து சாப்பிட்டாள்....!

சிறிது நேரத்தில் அங்கு ஒருவன் காரில் வந்தான் தன்னை முத்து என்று அறிமுகம் செய்துகொண்டான் "வசந்த் சாரின் நிறுவனத்தில்தான் கார் ஓட்டுகிறேன் சார் தான் என்னை வரசொன்னார் என்னுடன் வந்து தங்களுக்கும் வீட்டுக்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கிக்கொள்ள சொன்னார்" என்று பணிவாய் சொல்லி அழைத்தான்.

ரியாவும் அவனுடன் சென்று தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டாள், மதியம் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துவிட்டு அவனே வீட்டிற்கும் கொண்டு விட்டான்.

அனைத்தும் இருந்தும் ரியாவால் இயல்பாய் இருக்க முடியவில்லை இன்று இரவு எப்படி வருவானோ? என்ன செய்வானோ?
பழிவாங்குகிறேன் என்ற பெயரில் கொலை செய்தால் கூட பரவாயில்லை இப்படி கொடுமைப்படுத்துகிறானே என்று அவன் வரவை பார்த்து...... கழுகிடம் மாட்டிக்கொண்ட கோழிக்குஞ்சு நடுங்கிக்கொண்டிருப்பதை போல் நடுங்கிக்கொண்டிருந்தாள்???தொடரும்.......!

எழுதியவர் : ப்ரியா (24-Feb-16, 10:13 am)
பார்வை : 478

மேலே