தமிழ்த்தாய்
தாயே! தமிழ்த்தாயே! தமிழுக்கென
தன்னை அர்ப்பனித் தாயே!
நீயே, என்றும் தமிழின்
நின்ரூப மாவாய் தாயே!
தமிழின் தறமும் திறனும்
தம்முள் அடங்கும் தாயே!
தாமே தமிழின் தனிச்சிற்ப்பைத்
தோற்று விப்பீர் தாயே!
பெரும் சிறும் காப்பியம்
படைத் தளித்த தமிழின்
இலக்கண இலக்கியங் களையும்
இயற்றிய பெருமைத் தாயே!
அனுதிமும் உம்மை ஆராதிக்க
அடிபனிந் திடுவோம் தாயே!
அகிலத்தின் ஆற்றல் மிகுந்த
அரிய தமிழ்த் தாயே!

