பாமர போராட்டம்

பாமர மக்களுக்கு உதவ நினைத்தால் இதை லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

இயன்றவரை போராடு! இயற்கையை வாழவிடு!

அன்புள்ள முகநூல் நண்பர்களே இந்தியாவில் எண்பது சதவிகிதம் உள்ள விவசாய மக்களின்
பொருளாதரத்தை இருபது சதவிகிதம் உள்ள பணமுதலைகள் நிர்ணயிப்பது நெஞ்சு பொறுக்க முடியாத
வேதனை இதில் அரசு ஊழியர்கள் , அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்ல்லாம் அடங்குவர்.
ஆட்சியாளர்களே விவசாயிகளுக்காக என்ன செய்தீர்கள்? நீங்கள் போடும் சட்டம் எல்லாம் பணமுதலைகளுக்கே சாதகமாகத்தான் இருக்கிறதே தவிர பாமர விவசாயிக்கு எந்த லாபத்தையும்
கொடுப்பதில்லை . அரசு ஊழியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் போராடி சாதித்து கொள்கிறார்கள் காரணம் தேர்தல் பணி செய்வதால் பயந்துகொண்டு அரசாங்கம் பணிந்துவிடுகிறது, தொழிலதிபர்களுக்கு
ஒரு பிரச்சனை என்றால் சங்கம் அமைத்து போராடி அரசாங்கத்திடம் சாதித்துவிடுகிறார்கள் காரணம்
தேர்தல் நிதிக்கு அவர்களை விட்டால் வேறு கதி இல்லை . அரசியல்வாதிகளை சொல்லவேண்டியதில்லை. இப்படியிருக்க உலகத்துக்கே சோறு போடும் விவசாயிக்கு ஒரு இல்லை இல்லை நூறு பிரச்சனை என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் அநாதை என்ற நிலைக்கு
தள்ளப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு கேவலமான நிலை உள்ளது .மற்ற தொழிலில் அவரவர்
வேண்டிய லாபத்தை வைத்து விலை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள் . விவசாயத்தில் எவ்வளவு
போராட்டம் உள்ளது என்பதை இருபது சதவிகித பணமுதலைகளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை
ஆதலால் ஆட்சியாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் தயவு செய்து இதை ஏற்றுக்கொண்டு
அமல்படுத்தினால் விவசாயிகளை மீட்டெடுக்கலாம் இல்லையெனில் வரும்காலத்த்டில் மியுசியத்தில்
மட்டுமே விவசாயத்தை பற்றி பார்க்கலாம் .அதாவது விவசாயிகளின் வாரிசுகளில் ஒருவருக்கே அரசு வேலை தரவேண்டும். அரசு வேலையில் இருப்பவரும் கட்டாயம் விவசாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை சட்டம் மூலம் கொண்டுவரவேண்டும் அரசு ஊழியர்களை வாரம் ஒருநாள் விவசாயிகளின்
தோட்டத்துக்கு சென்று வேலை செய்துவர வேண்டும் என்பதை விதியாக கொண்டுவரவேண்டும்
அடுத்து அவர்களை வருடத்திற்கு குறைந்தது இருபது மூட்டை தானியத்தையாவது அரசுக்கு வழங்கவேணும் என்ற விதி இருக்கவேண்டும்.இதையெல்லாம்ஏற்கும் நபர்கள்தான் அரசு வேலைக்கு வரவேண்டும். அடுத்து தொழிலதிபர்கள் அனைவரும் வருடத்திற்கு நூறு மூட்டை தானியத்தை
அரசுக்கு வழங்கினால்தான் உரிமம் தொடரும் என்ற விதியை கொண்டுவரவேண்டும். அடுத்து
அரசியல்வாதிகளுக்கு வருடத்திற்கு ஆயிரம் மூட்டை தானியங்களை வழங்கினால்தான்
பதவி நிலைக்கும் என்ற விதி கொண்டுவரவேண்டும் அதேபோல் தொலைகாட்சி நிலையங்களுக்கு
நமீதா நயன்தார இவர்களை விடுத்து கருப்பன் முனியம்மா கருத்தம்மா போன்ற விவசாய
அறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கொலை கொள்ளை கற்பழிப்பு சாவு இவற்றை விடுத்து
விவசாயத்துக்கு வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே உரிமத்தை தொடரசெய்யவேண்டும் இதையெல்லாம் செய்து விட்டு அடுத்தபடியாக இந்தியாவில் உள்ள அனைத்து
நதிகளையும் ஒன்றாக இணைக்கவேண்டும்( இதற்க்கு எ.பி.ஜே .அப்துல்கலாம் அவர்கள்
விளக்க வரைபடம் கொடுத்துள்ளார்) இதையெல்லாம் செய்து என்றைக்கு எண்பது சதவிகிதம் உள்ள
விவசாயிகளை காப்பற்றுகிறதோ அப்போதுள்ள அந்த அரசாங்கம் நூறு வருடத்திற்கு தேர்தல் பிரச்சாரம்
இல்லாமலேயே ஜெயித்து ஆட்சி அமைப்பார்கள் இது நிஜம், சத்தியம் .

எழுதியவர் : க.முருகேசன் (25-Feb-16, 5:35 pm)
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே