நிதர்சனம்
துணுக்குகள் பல சேர்த்து
நிதானமாய் நல்லதொரு திட்டம் தீட்டி
சின்ன சின்ன அடியெடுத்து வைத்து
சரியுமோ சாயுமோவென்றுக் கவலை கொண்டு
இமைத்தால் மறைந்துவிடுமென்று துயில் கொள்ளாது
அல்லும் பகலும் பாடுப்பட்டு உருவாக்கிய கனவு கோட்டை
கணப் பொழுதில் தகர்க்கப்பட்டு மண்ணோடு மண்ணாக
உள்ளுக்குள் சூறாவளியாய் பொங்கியெழும் கோபம்
அண்டத்தையே நசித்து
சாம்பல் குவியலின் மீதேறி நின்று
தூசியை ஊதி தள்ள உந்த
மிஞ்சியது ஒரு துளி கண்ணீர்