திறவுகோல்
திறவுகோல்
சில நேரம் ஒதுக்கி
வைத்த சிலதை
நாம் யோசிப்பதில்லை
முற்றிலுமே நினைவிற்கு
கொண்டுவருவதில்லை - அதனாலே
மறந்தததாய் சொல்வதற்குமில்லை
ஒரு சுவை ஒரு மணம்
ஒரு தொடுதல் ஒரு பொருள்
ஒரு காட்சி ஒரு செயல்
ஒரு கீறல் ஒரு காயம்
ஒரு வலி
ஒரு வார்த்தை ஏன்
ஒரு எழுத்து கூட
திறவுகோலாய் திறக்கும்
நம் நினைவுகளின்
குவியலில் ..
குவியலில் கண்டுகொள்ள
ஒரே ஒரு சின்ன
திறவுகோல் போதும் ..
குவியலில் இருக்கும் பல
ரகசியங்களும் சுவாரசியங்களும்...
- வைஷ்ணவதேவி