தேடியும் தென்படவில்லை

தேடினேன் அன்று நண்பர்களை,
தேடி பிடிக்கும் விளையாட்டில்,
தேடுகிறேன் இன்று நண்பர்களை,
தேவைகளுக்காய் ஓடும் விளையாட்டில்,

கண்டேன் அன்று நண்பர்களின் உறவையும் - சிந்தை
கொண்டேன் அன்றே மகிழ்ச்சி இதுவே என்று !
கண்டேன் இன்று உறவுகள் பலவற்றை - சிந்தை
கொண்டேன் இன்றே மகிழ்ச்சி பலவகை உண்டென்று !

கைபிடித்தேன் அன்று தோழியின் தோல் சாய்ந்து,
கைபிடிக்க ஆசை கொள்கிறேன் இன்று
கணவனவன் தோல் சாய்ந்து,

காலங்கள் மாற கோலங்கள் மட்டுமல்ல,
கன்னி ரூபங்களும் மாறும்,
குழந்தை சிருமியாவாள்,
கொண்டாட்ட சிரிப்பொலி நிறைவாக சுற்றி திரிவாள் !

சிறுமி குமரியாவாள்,
சிவந்த முகத்தோடு,
சீரும் மகிழ்ச்சி நெஞ்சோரம்,
சின்னதாய் நடுக்கம் என்ன மாற்றம் என அறியாது !

குமரி கல்யாண வயதிற்கு வர,
கனவுகள் பல கண்டு,
கள்வன் யாரென்று தேடி,
கைகளை காற்றோடு நீட்டி,
கனவிலே தேடுகிறேன் !

தேடுதல் தீரவில்லை,
தேடிவது என்ன என்றும் அறியவில்லை,
தேடுதல் காலத்திற்கேற்ப மாற,
தேடுதல் தொடர்கிறது,
தேடியும் தென்படவில்லை !!!

எழுதியவர் : ச.அருள் (27-Feb-16, 8:18 am)
பார்வை : 375

மேலே