வெற்றிக்கு தோல்விகளைச் சந்திப்பது மேலானது
1. பலர் பார்க்க விழுந்ததினால்
எழுந்திட மறுத்து மண்ணைக் கவ்விக் கொண்டு
விழுந்தபடியே வீற்றுக்கிடக்கிறான்
அவன் இயலாமையே தோல்வி
2. பயிர் நீரில்லா பாலை
வாழ வழி சொல்லித் தருகிறது
தோல்வி அதனிடம் நிலைத்த போதினும்
தாகம் தனிக்கிறது
அதன் அழகை மெருகூட்டி
வெற்றியைத் தன் பார்வைக்குள்
ஈர்க்கிறது
3. ஒற்றைக் காலில் தடிப் பொல்லை
துணைக்கு ஏந்தி நடக்க
குன்று குழிகளில் இடறி விழுந்தவன் எழுந்து கொள்கிறான்
அவனுக்கு அதுவே நிலையானதன்று....
தடக்கி விழுந்தவன்
தூக்கி விட துணைக்கு ஒரு கை பார்க்கிறான்
அவனிடம் கைகள் இருப்பதையும் மறந்து
4. வெற்றியின் பெயர் சொல்லி
பள்ளி பரீட்சையில் தோல்வி
எய்ததால்
தற்கொலையில் தன் முடிவை
நியமித்து
மாற்றியமைத்தான் அவன்
தோல்வியே அவனுக்கு நிலையென்று
அதுவே இறுதியாய் உறுதி பெற்றது
5. ஆகாய மார்க்கம்
கடல் வழிப்பயணம்
கண்ட தோல்விகள் கொஞ்சமா,?
இன்று அதன் வழி சாதனைகள்
சரித்திரம் படைக்கிறது
6. ஏர் பிடித்து
வேர் உழுது தன் எதிர்காலத்தை
வயலில் வரைபவன் வாழ்வில்
சரிவுகள் நிதம் காண்கிறான்
அதை கடந்து வெற்றியும்
கொஞ்சமாய் சுவைக்கிறான்
7. கருவில் உருவாக்கி
கருணை மழை பொழிந்து
உயிரோடு ஒரு போராட்டம்
மரணத்தின் விளிம்பில் நின்று
மீண்டும் மீண்டு வரும் தாயும்
தோற்றுப் போகிறாள்
வளர்ப்பு தவறிப் போகையில்
8. பள்ளிப்பருவம்
பதினெட்டு வயதினில் தேனாய் ஊறும் காதலில்
தெகிட்டாத நினைவுகளைச் சேகரித்து
தோற்றுப் போனோர்
இங்கனமும் வாழ வழி தேடி அழைகின்றனரோ,?
இல்லை அவர் வாழ்க்கை அழகான தேடுதலில்
9. திறமை சொறிந்து கிடக்க
வேலை தேடி அழையும்
ஒருவன் தோல்விகளைத் தொடர்ந்தே
வெற்றி மகுடம் சூடுகிறான்
10. கலாமின் கண்டு பிடிப்பு சாதனைகள்
தோல்விகளின் முடிவிலே ,
அவர் சரித்திரம் பேசி நிற்கும்
பின்னரானை வெற்றிகள்,
கலையில் தோல்வியைக் காணாதாரும்,
விஞ்ஞானத்தில் வெற்றியை மட்டும் ஈட்டிச் சென்றாரும்
இங்கு இல்லை
11. இயற்கையின் காட்சிகளை
இரசித்துப் பார்க்க முடியாத
குருடரும்,
என்னத்தில் ஊறுவதை
வண்ணம் தீட்டி சொல்ல வல்ல
வார்த்தை இருந்தும்
சொல்ல முடியாத ஊமையரும்,
உடலை மண் தின்னவென்றே
படைக்கப் பட்டவர்களன்று
வெற்றி வாகை சூடிக்கொண்ட
சரித்திரம் லட்சம்
12. பாரதி வரலாற்றில்
"நவீன கவியின் முன்னோடி
மாஹா கவி "
அவர் மரணத்தின் பின்னொரு
தேடலில்
அவர் கவிதைகள் அவர் புகழ்
பாடி நிற்கின்றது
நிலையான மரணத்திலும்
நிலைத்து நிற்கும் வெற்றியீட்டிச் சென்றார் அவர்
13. புதுப் புது படைப்புக்கள்
நவீன உலகின் நடைக்கேற்ற சினிமாக்கள்
வளர்ச்சிப் போக்கினில்
வெற்றி தோல்வி கண்டு
நிலையான விருதுகள் பெற்று விருட்சமாகிறது
14. மேடை ஏறாத கால்கள்
பட்டங்கள் பெறாத படிப்புக்கள்
விருதுகள் வாங்காத கைககள்
வியந்தொரு நாளில்
உலம் பார்க்க அதிசய மேடையில்
அரங்கேற்றம் பண்ணுவதில்லையா??
15.ஏழை வயிற்றில் பிறந்து
ஏக்கம் நிறைந்த தாயின்
கண்ணீர்துடைக்க,
பசி வயிற்றுடன் பள்ளிக்குச் செல்கிறான்
பட்டினி கிடந்து அவள் உழைத்து வளர்க்க....,
சேலையில் இருக்கும் ஜன்னல்கள்
அவள் வறுமையின் வடிவத்தைக் காட்டுது
அவன் வறுமையில் தோல்வி காண்கிறான் ஒரு நாளில் வெற்றி அவனிடம் நிலைகொள்கிறது
தோல்வியைத் தொடர்ந்தொரு வெற்றி.
வெற்றியைத் தொடர்ந்தொரு தோல்வி,
இடையில் இயங்கிக் கொண்டிருக்கிறது மணித வாழ்க்கை...

