தூது வந்த காற்று
சாளரம் தாண்டிய
சந்தன காற்றும்
சாமரம் தீண்டியே
சங்கதி சொல்லும்...
"பூமரக் கொம்பில்
புலம்புது மலர்கள்
பாமரன் விரல் தாங்கி
பாவையின் குழல் தூங்க..."
விரிக்கிறேன் விழியை...
விளிக்கிறேன் வளியை...
'பாவை எவளோ...?
பௌர்ணமி நகலோ...?'
காந்தவாகன் கலங்கினான்...
கவிதையில் விளக்கினான்...
"அகவெழில் மங்கை
அகவிடும் மஞ்ஞை...
முகிலனும் கருகுவான்
மழையென உருகுவான்.."
சாந்தமாய் நடித்தேன்
சந்தமாய் வடித்தேன்...