சீதனம் தோன்றிய வழி

பெரும்பாடு பட்டு பிறர்தய வற்று
அரும்புள் இதழ்வைத் துமதை – அருந்தா
தெடுத்துவந்து சேகரிக்கும் தேனீக்க லென்றும்
அடுத்தவர் கைபார்ப்ப தன்று
பெண்ணுழைப்பைக் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்திடும்
பண்பற்ற ஆணினம் பாரினிலே – கண்ணுற்ற
தேன்கூட்டில் கற்றிட்ட தீயபழக் கங்களில்
தோன்றியது சீதனம் தான்
*மெய்யன் நடராஜ்