கனவான காதலே
உறவென உனைமட்டும் நினைத்தேன்.நீ
இரவாகி போனதால் தவித்தேன்.
போதையான உன் நினைவை விலக்கமுடியவில்லை.
உனைபிரிந்தால் என் வாழ்வில் வெளிச்சமது இல்லை.
நீ விட்டுபோன மனசு இப்போ கெட்டுப்போச்சி.
தொட்டுப்பேச நீ இல்லாம இல்ல மூச்சி.
சொல்லி அழமுடியவில்லை நீ தந்த வலியை..
வெள்ளிநிலா போல ஆனேன், உறங்காத நிலையில்..
அன்பது உனக்கில்லை,அம்பாகிப்போனாய்.
வம்புகள் பல செய்து வலி தந்தாய் வீணாய்..
போலி என அறியாமல் வேலி என உனை நினைத்தேன்.
தாளி ஒன்று நீ போட தாரமாகி எனைக்கொடுத்தேன்.
உண்மை என உனைநினைத்து உயிருக்குள் உனை இணைத்தேன்.
கண் மையாய் கரைந்து நீ காணாமல் போய்விடவே
கரையிடம் சொல்லி அழும் அலைபோல ஆகிவிட்டேன்.
எத்தனை காலம் நீ தீட்டிய திட்டம் இது.
உயிரிலே உறைந்தவனே உனை,
என்ன சொல்லி திட்டுவது.
காலத்தின் கையிலே என் வாழ்வை கொடுக்கிறேன்.
கால் இழந்த முடவனாய் உனை இழந்து தவிக்கிறேன்..