தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-19

சித்திரமே சித்திரமே
சிங்கார பொற்சரமே
சீமையில படிப்ப முடிச்சி
சின்னமனூரூ வாரவளே..!

அற்புதமே அற்புதமே
அழகில் நீ பொற்பதமே
பொல்லாத கண்ணுப்பட்டா
திருஷ்ட்டிப்பட்டு போயிடுமே !

தன்னந்தனியா வரலாமா - இது
தண்ணியில்லா துறைதாம்மா
விட்டா ஆள விழுங்கும்
முட்டாப் பய ஊரம்மா !

சோத்துக்கு வழியில்ல..-ஆனா
சோக்குக்கு குறைவில்ல..
வட்டிக்கு வாங்கியாச்சும்
விளம்பரம் தெருவுல….!

தேர்தலுக்கு தேதி வந்தா
ஊருக்கே கொண்டாட்டம்
சாராயப் பார்ட்டியிலே
நாள்முழுக்க களியாட்டம் !

வேணாம்ன்னு சொன்னாலும்
விடமாட்டான் வேட்பாளன்
கூழை கும்பிடு போட்டு போட்டு
குழி பறிப்பான் பின்னால..!

இலவசத்தில் பரவசம் அடைகிற வர்கமே
சுரண்டலுக்கு அதுதானே ஊழல் சொர்கமே
ஒப்பேரா பொருளுக்கு ஒருகோடியில் விளம்பரம்
யாரப்பன் வீட்டு சொத்துயிது யோசிக்க மறக்கறோம்

ஜனநாயகம் செத்துப்போயி பணநாயகம் வாழுது
பாராளு - மன்றத்தில் பேப்பர்கள் மாயம் ஆகுது
வெள்ளக்கார துரைகள விரட்டியதா மார்த்தட்டுறோம்-இப்போ
கொள்ளைக்கார பசங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்

எழுதியவர் : சாய்மாறன் (29-Feb-16, 4:45 pm)
பார்வை : 59

மேலே