அது எங்கிருந்து வந்தது

தினமும் வருகைபுரியும் என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சில நாட்களாக வரவில்லை.சிறிது நாட்களுக்குப் பின் இதைப்பற்றி அவரிடம் உரையாடிய போது அவர் கூறிய நிகழ்வுகள் என்னை பாதித்தது.
அவர் தன் இருசக்கர வாகனத்தில் தன் உறவினர் ஒருவருடன் மதியம் 3.30 மணியளவில் ஒரு மேம்பாலத்தில் மிதமான வேகத்தில் சென்றிருந்திருக்கிறார்.அப்போது திடீரென்று அந்த மேம்பாலத்தின் இருசுவர்களுக்கிடையில் கண்ணிற்கு அகப்படாமல் சிக்கியிருந்த ஒரு சிறிய நூல் அவர் கழுத்தில் சிக்கி அவரை நிலைகுலைய வைத்திருக்கிறது. அந்த நூலை அவர் எடுக்க முயன்றதில் அவர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.இதன் விளைவாக என் பேராசிரியருக்கும்,அந்த உறவினருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.பின்னால் அமர்ந்திருந்த அந்த உறவினருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் விளைவாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.மருத்துவச்செ லவு சுமார் 1,00,000த்திற்தும் மேல் ஆயிற்று.
அது எங்கிருந்து வந்தது?
அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து ஊழியரின் கவனக்குறைவின் காரணமாக வெளியாகியிருந்த அச்சிறிய நூலால் பல சோதனைகளை சந்திக்க வேண்டியதாயிற்று.எனவே நாம் அனைவரும் சமூக அக்கரையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,

எழுதியவர் : நாநி (29-Feb-16, 4:55 pm)
பார்வை : 51

மேலே