பின்னால் இழுக்கிறாய்

ஒரு நமுத்துப்போன நினைவின்
பிசுபிசுப்பான நொடிகளின்
ஊடாக ..
வரிசைகட்டி வந்து போகின்ற
மெல்லிய பெருமூச்சுகளின் போது
நீ தூக்கி வீசிய வாடிய பூச்சரம்
ஒன்றின் நாரில் தான்
என் உயிரும் உணர்வும் கலந்து
ஒட்டியிருக்கின்றன உலர்ந்து ..
என்பதை நீ அறிய வாய்ப்பில்லை..
உன் வீட்டு மாட்டுத் தொழுவத்தில்
ஓரமாக சார்த்தி வைத்திருக்கும்
வைக்கோல் அடைத்த கன்றுக்குட்டியின்
நிலைத்த கண்களைப் போய்
பார்..அதில் நான் தெரிவேன் ..!

எழுதியவர் : ருத்ரன் (29-Feb-16, 6:30 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 133

மேலே