ருத்ரன் 85 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ருத்ரன் 85 |
இடம் | : திருவாரூர் |
பிறந்த தேதி | : 21-Aug-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 189 |
புள்ளி | : 26 |
எரியும் மனசு எவருக்கும்
--பிறப்பின் பிரிவுகள் கண்டு !
சாதிமத கொள்கை வேறுபாடு
--ஏழை பணக்காரன் பாகுபாடு !
ஏற்றத் தாழ்வுகள் தழைத்திட்ட
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--என்றும் தொடரும் இங்கு !
பகுத்து அறியாத உள்ளங்கள்
--வகுத்து வாழாத இதயங்கள் !
தொடரும் மூட நம்பிக்கை
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--நிலை கெட்ட மாந்தரால் !
மாறா மடமை செயல்களும்
--தவறிடும் கடமை உணர்வும்
அழிவிற்கு அடித்தளம் ஆகும்
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--தடம் மாறிய அரசியலால் !
வன்முறை ஒன்றே வழியென
--வாழும் நீசர்கள் நாட்டில்
அறவழி
எரியும் மனசு எவருக்கும்
--பிறப்பின் பிரிவுகள் கண்டு !
சாதிமத கொள்கை வேறுபாடு
--ஏழை பணக்காரன் பாகுபாடு !
ஏற்றத் தாழ்வுகள் தழைத்திட்ட
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--என்றும் தொடரும் இங்கு !
பகுத்து அறியாத உள்ளங்கள்
--வகுத்து வாழாத இதயங்கள் !
தொடரும் மூட நம்பிக்கை
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--நிலை கெட்ட மாந்தரால் !
மாறா மடமை செயல்களும்
--தவறிடும் கடமை உணர்வும்
அழிவிற்கு அடித்தளம் ஆகும்
--நிலைகண்டு எரியும் மனசு !
எரியும் மனசு எவருக்கும்
--தடம் மாறிய அரசியலால் !
வன்முறை ஒன்றே வழியென
--வாழும் நீசர்கள் நாட்டில்
அறவழி
பணிகள் முடிந்தன
பாதியில் நின்றது இரயில்
தேர்தல் விதிமுறை அமல் ....1
வீட்டில் முளைத்தன
வாங்கிய நெல் விதைகள்
நிலங்களை காணவில்லை ...2
அலகில் குச்சிகள்
தவிக்கிறது சுற்றும் பறவை
மரங்கள் இல்லை ....3
நகரெங்கும் வெள்ளம்
அழுதது மழை நீர்
ஒதுங்கிட இடமில்லை ...4
சுவாசிக்கும் மனிதன்
சுகமிலா நிலை நாளும்
காற்றில் கலப்படம் ...5
( பொதுவான கருத்தில் எழுதியது )
++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
சீர்கெடும் சமுதாயம்
சிதறிடும் நெஞ்சங்கள்
எண்ணத்தில் கலப்படம் ...1
முளைத்திடும் சந்தேகம்
முரண்படும் உணர்வுகள்
முறிந்திட
நான் உழைக்கும் வர்க்கம்
இலவச டீவியில் இலவசத்தை
அனுபவிக்கும் கூட்டமல்ல ..
மோட்டா குடிகாரன்
மோட்டார் வண்டியில் சென்று
எதிரேவருபவனை கொன்று
எமனை தானே அழைத்துகொண்டு
மடிபவனுக்கு நீ கண்ணீர் விட்டு
என்ன பயன்?
குடியானவன் தான்
கோவிலையே பாராமரிக்கிறார்கள்
இது தெரியாத உனை என்ன சொல்வது?
தப்பையே தொழிலாக செய்துக்கொண்டு
இருக்கும் சிலநபர்களால்
என் தேசத்தை குறைசொல்ல
எவனுக்கும் தகுதியில்லை.
என்தேசத்திலேயே எனக்கு
எல்லைவகுக்கும் தேசவிரோத
கூட்டங்களால் தான்
இந்த கோஷங்கள்
உலகத்தில் சாதி,மத,நிற
பாகுபாடில்லாத நாட்டைக்காட்டு.
வெமூலாக்களும்,கன்ஹயாகளும்
சாதி சொல்லி அனுபவிக்கும் ச
யானை மண்ணை
தானே தலையில்
வாரி இறைப்பதில்
விவரம் உண்டு
ரோமங்கள் இல்லை
உடலில் என்பதால்
சூரிய ஒளியினால்
ஏற்படும் வியாதியை
தோலுக்கு வராமல்
காத்திடத் தான்..
இயற்கையான
சுபாவம் ..
யானைகளுக்கு..
சில மனிதரைப் போல
தன்னை காத்துக் கொள்ள
மண்ணையும் வாரி
இறைத்துக் கொள்வதில்
அவைகளுக்கு சுகமும் கூட..
பாவம் அல்ல யானைகள்!
நான் அரக்க வம்சம்- எனக்கு இன்னொரு முகம்.
இரவல்லி வாசத்தில்
தாமரைகள் தலைகுனிய
நீட்டிய கூட்டல் விகிதங்கள்
சொல்லிக் கொள்ளாமல்
ஒன்றையொன்று
அடித்துச் சாகும்
தெறிகாலை பனிப் புயலில்
தொலைத்த வெளிச்ச பவனங்களில்
முகடு தட்டிய
மலை மேகங்கள்
மந்திரித்த
மயக்கத்தில் நோகும்.
தவிடுகளின்
கூட்ட நெரிசலில்
சிக்குண்ட புழுப் பயணம்
சாரா வாதங்களில்
மேடைதோறும் வந்து
வாதிட்டு போகும்
பட்டறைப் பவனிகளில்
சிவந்தெழுந்த வக்கிரங்கள்
சிற்றுளை(சிறு+துளை ) ஊர்வலத்தில்
சிதறிப்போய் வேகும்
இனி ஒரு விதி செய்யும்வரை
செம்மண்ணும் கருமண்ணும்
கலக்காத
ஆலகாலச் சாலையில்
ஊழிச் சகடம் ஓட்டிவந்த
ஊழல்காரன் வீட்டில்
சத்தியம்
சமையல் ஆகும்.
சுசீந்திரன்.
இயற்கையையும்
இலக்கியங்களையும்
நுகர்ந்து வாசித்த எனது
இரசனைச் சிறகுகளிலிருந்து
ஓர் இறகு பிரிந்து
கவிதைப் பறவை என்றாகியிருக்கும்.
பல நூறுகோடிகளின்
மழைத்துளியிலிருந்து
ஒரு மழைத்துளியினை
களவாடிய எந்தன்
இதயப் பாலைவனம்
இலக்கியப் பூக்களை வளர்த்திருக்கும்.
தனிமைக்கு
கற்பனையைத் துணையாக்கி
காசி நதியோரத்தில்
உலாவியப்போது
மிதந்தோடிய
அவளின் நினைவுப்
பிணங்கள்
என் காதலை நலம்
விசாரித்து பயமுறுத்தியிருக்கும்.
இப்படியாகத்தான்
யானையை நினைத்து
கழுதையை வரைந்த கதையாய்
எதையோ எழுத நினைத்து
எதை எதையோ எழுதும்
என் பேனா
இலக்கியம் படைத்துவிட்டதாக
கர்வம் கொண்ட
ஆடிவந்த தென்றலோர் தோட்டக் கொடியினில்
வாடிநின்ற ஒர்மலர்தன் னில்சுவாசம் தந்திட
பாடிவந்த தோட்டக்கா ரன்நீரைப் பாய்ச்சிட
வாடிநின்ற பூமலரும் தன்னித ழைவிரிக்க
தேடிவந்தாள் பூங்கொடி யாளங்கே புன்னகையில்
வாடிய பூவைப் பறித்தனள் மென்விரலால்
ஆடிடு தேதேன் மலர்
----கவின் சாரலன்
இது ஒரு விகற்ப ப ஃறொடை வெண்பா
2அடி குறட் பா 3அடி சிந்தியல் வெண்பா 4 அடி அளவடி வெண்பா
5 அடி முதல் 12 அடி வரை ப ஃ றொடை வெண்பா என்பது தமிழ் யாபிலக்கண
நெறி முறை
ஆர்வலர்கள் பயிலுக முயலுக
எனக்கு என்னவோ உன்னை
பார்க்கத் தோன்றவே இல்லை
எதற்காக உன்னை
பார்த்தே ஆக வேண்டும் நான்
என்பதும் தெரியவில்லை
என்ன வேலை செய்கிறாய் என்று
நீ என்னை கேட்ட போது
ஆட்டோ ஒட்டுகிறேன்
என்றுதானே சொன்னேன்..
அதுவே செய் ..நல்லது
என்று சொல்லிவிட்டு
எதற்காக சிரித்தாய் ..
அதுவும் புரியவில்லை..
ஆனால்..
அன்றிலிருந்து
எனக்கு கையும் ஓடவில்லை..
காலும் ஓடவில்லை..
எனது ஆட்டோவும்
வழக்கமான ரூட்டில் ஓடவில்லை..
உன் வீடு உள்ள வீதிக்கே
வந்து வந்து போகிறேன்..
இதற்கு பெயர் என்ன..
காதல் என்று மட்டும்
சொல்லி விடாதே ..
பயமாக இருக்கிறது..
நிறைவேறாமல் போய் விடுமோ என்று..
உன்னை பிடிக்கிறது என்ற
தெருவோரம் பூச்சரம்
வாடியபடி
என்னை கவனிக்கிறது !
செவ்வாய் தோஷம்
உனக்காம்
எனக்கு சந்தோஷம்..!
எனக்கும் உண்டாம் ..!
பேசட்டுமா ..
உன் வீட்டில் ?
..
இழுத்து விடும்
எனது மூச்சுக் காற்றின்
இளஞ்சூட்டில் ஒளிந்திருக்கும்
நிலவின் குளிர்ச்சியை
நீ மட்டும்தானே அறிந்தாய்..
இது வரையிலும்
நிலவும் கதிரும்
இரட்டைத்தண்டவாளங்கள்
உனக்கும் எனக்குமிடையில்
ஒன்றில் நீ உரசிப் போவது
அடியில் தேயும்
என் நினைவுகளைத்தான்..
எத்தனை முறை வேண்டுமானாலும்
உரசிப் போ..
உயிர் என்னுள்
ஒட்டியிருக்கும் வரை!