காதல் அல்ல

எனக்கு என்னவோ உன்னை
பார்க்கத் தோன்றவே இல்லை
எதற்காக உன்னை
பார்த்தே ஆக வேண்டும் நான்
என்பதும் தெரியவில்லை
என்ன வேலை செய்கிறாய் என்று
நீ என்னை கேட்ட போது
ஆட்டோ ஒட்டுகிறேன்
என்றுதானே சொன்னேன்..
அதுவே செய் ..நல்லது
என்று சொல்லிவிட்டு
எதற்காக சிரித்தாய் ..
அதுவும் புரியவில்லை..
ஆனால்..
அன்றிலிருந்து
எனக்கு கையும் ஓடவில்லை..
காலும் ஓடவில்லை..
எனது ஆட்டோவும்
வழக்கமான ரூட்டில் ஓடவில்லை..
உன் வீடு உள்ள வீதிக்கே
வந்து வந்து போகிறேன்..
இதற்கு பெயர் என்ன..
காதல் என்று மட்டும்
சொல்லி விடாதே ..
பயமாக இருக்கிறது..
நிறைவேறாமல் போய் விடுமோ என்று..
உன்னை பிடிக்கிறது என்று சொல்லிவிடு .
போதும் இப்போதைக்கு..!

எழுதியவர் : ருத்ரன் (3-Mar-16, 5:59 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
Tanglish : kaadhal alla
பார்வை : 206

மேலே