ஆடி வந்த தென்றல் பாடி வந்த தோட்டக்காரன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆடிவந்த தென்றலோர் தோட்டக் கொடியினில்
வாடிநின்ற ஒர்மலர்தன் னில்சுவாசம் தந்திட
பாடிவந்த தோட்டக்கா ரன்நீரைப் பாய்ச்சிட
வாடிநின்ற பூமலரும் தன்னித ழைவிரிக்க
தேடிவந்தாள் பூங்கொடி யாளங்கே புன்னகையில்
வாடிய பூவைப் பறித்தனள் மென்விரலால்
ஆடிடு தேதேன் மலர்
----கவின் சாரலன்
இது ஒரு விகற்ப ப ஃறொடை வெண்பா
2அடி குறட் பா 3அடி சிந்தியல் வெண்பா 4 அடி அளவடி வெண்பா
5 அடி முதல் 12 அடி வரை ப ஃ றொடை வெண்பா என்பது தமிழ் யாபிலக்கண
நெறி முறை
ஆர்வலர்கள் பயிலுக முயலுக