கெக்கரி

இரவு பூசிய மை கரைய
சூரியன் வீசிய செங்கதிரில்
மேகக் கண்கள் சிவந்திட
மெல்லச் சூடேற்றி வெள்ளைப்
பஞ்சுப் பொதிகளாய் மேகம் நகர
சில சற்று சூலேற்றிக் கறுக்க
வந்திடுமோ துளிகள் நனைக்க...
காணும் போதே எல்லாம் கரைய
நிர்மல்ய நீலம் எங்கும் பரவ
ஆதிக்கம் செய்வேன் இனியென
ஆதவன் சூளுரைத்துச் சொல்ல
வான வர்ண ஜாலங்கள் இக்
கேடுடை நகர மாந்தர்க்குமா வென
கெக்கலிக் கொட்டிக் கீச்சிட்டு
ஆர்பரிக்கும் பறவைகள் சில....
---- முரளி