இயற்கை

நம் நாட்கள் விடியக் காரணம் இயற்கை
நாம் உணவு உண்ண ஆதாரம் இயற்கை ;
சுட்டெரிக்கும் சூரியன் இயற்கை
சுழன்றுவரும் பூமியும் இயற்கை
நினைவுகள் தூண்டும் நிலாவும் இயற்கை ;
நாம் சுற்றித் திரியும் பகல் இயற்கை
சுகமாய் உறங்கும் இரவும் இயற்கை ;
சோம்பல் போக்கும் வெயில் இயற்கை
துள்ளி விளையாட, தூவும் மழையும் இயற்கை
மழைக்குப்பின் வரும் வானவில்லும் இயற்கை ;
தென்றல் வீசும் வசந்தகாலம் இயற்கை
நீர்வளம் பெருகும் மழைக்காலம் இயற்கை
விடுமுறை தரும் கோடையும் இயற்கை ;
இயற்கை இயற்கை இயற்கை எல்லாமே இயற்கை
நம்மைக் காப்பதும் இயற்கை அழிப்பதும் இயற்கை
இயற்கையை நாம் காத்தால் இயற்கையும் நம்மை காக்கும்
இயற்கையைக் காப்போம் இனிமையாய் வாழ்வோம்!

எழுதியவர் : வினோத். செ (2-Mar-16, 10:02 pm)
Tanglish : iyarkai
பார்வை : 728

மேலே