எண்ணத்தில் துளிர்த்தவை - 9
பணிகள் முடிந்தன
பாதியில் நின்றது இரயில்
தேர்தல் விதிமுறை அமல் ....1
வீட்டில் முளைத்தன
வாங்கிய நெல் விதைகள்
நிலங்களை காணவில்லை ...2
அலகில் குச்சிகள்
தவிக்கிறது சுற்றும் பறவை
மரங்கள் இல்லை ....3
நகரெங்கும் வெள்ளம்
அழுதது மழை நீர்
ஒதுங்கிட இடமில்லை ...4
சுவாசிக்கும் மனிதன்
சுகமிலா நிலை நாளும்
காற்றில் கலப்படம் ...5
( பொதுவான கருத்தில் எழுதியது )
++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
சீர்கெடும் சமுதாயம்
சிதறிடும் நெஞ்சங்கள்
எண்ணத்தில் கலப்படம் ...1
முளைத்திடும் சந்தேகம்
முரண்படும் உணர்வுகள்
முறிந்திடும் நட்புகள் ..2
இதயத்தில் இருநிலை
இழந்திடும் சிந்தனை
இறந்திடும் உண்மைகள் ..3
உள்ளத்தில் போராட்டம்
உடல்நலம் வாட்டம்
உருமாறிய வட்டம் ...4
மறுத்திடும் உள்ளங்கள்
மறந்திடும் வார்த்தைகள்
மனங்களின் மறுபக்கம் ...5
இருவிழிகள் ஒரேபார்வை
இயற்கையின் நியதி
இருவிழி .இருபார்வை .இன்று ! ...6
+++++++++++++++++++++++++++++++++
( அனுபவத்தில் எழுதியது )
+++++++++++++++++++++++++++++++++
பழனி குமார்
08.03.2016