அகிலத்து கருவானாய்
அன்பென்ற
அருளுக்கு
உருவானாய்..!
ஆகாய
அழகுக்கோ
ஒளியானாய்..!
இன்றைக்கும்
என்றைக்கும்
எழிலானாய்..!
ஈன்றயிளங்
கன்றுக்கோ
பொழிலானாய்..!
உண்னவுண்னக்
குறையாத
உணர்வானாய்..!
ஊற்றோடும்
ஓடைநீர்ப்
புனலானாய்..!
என்றென்றும்
எழில்மேவும்
நிலவானாய்..!
ஏற்றாமல்
எரிகின்ற
விளக்கானாய்..!
ஐந்தான
விரல் பற்றும்
பிடியானாய்..!
அசைந்தாடி
கோல்சுற்றும்
கொடியானாய்..!
ஒன்றாத
எனதுள்ளத்
திருவானாய்..!
ஓங்காரப்
பொருளுக்கு
குருவானாய்..!
ஔடதம்
அளிக்கின்ற
தருவானாய்..!
அஃதாலே
அகிலத்துக்
கருவானாய்..!