நாடகம்

அடைத்திருந்தது பிரபஞ்ச கதவு
சாவியும் பிரபஞ்சமாக இருந்தது
சுருட்டினான் பிரபஞ்சத்தை
கதவை தேடினான்
கதவு காணவில்லை
சாவி இருந்தது
விரித்தான் பிரபஞ்சத்தை
கதவு கிடந்தது
சாவியை காணவில்லை
அவன் பறந்து கொண்டே சொன்னான்
கல்லை கண்டால் நாயை காணோம்
நாயை கண்டால் கல்லை காணோம்
இதை பார்த்துக்கொண்டிருந்த ஒளி
பட்டென சிரித்து விட்டது
ஏதோ நகைச்சுவை நாடகம் என நினைத்துக்கொண்டு

எழுதியவர் : (8-Mar-16, 12:22 am)
Tanglish : naadakam
பார்வை : 79

மேலே