காலத்தின் நடவு காலத்தில்
இருளின் அரவணைப்பில் இந்த நெடுஞ்சாலை
வானத்து மின்மினி பூச்சியாக
இந்த நட்சத்திரங்கள்
காத்திருக்கும் பச்சை நிற பல்கிளையானின் ஒவிய நிழல்கள்
எங்கும் மானுட கனவு பயணங்கள்
சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் குளிர் நண்பன்
இரவு நேர மயக்கத்தில் கூட வரும் சந்திரன்
இன்னமும் நீண்டு கொண்டிருக்கும் உன் தழுவல்
இதை விட என்ன வேண்டும்
எனக்கு இந்த காலத்தின் நடவு காலத்தில்