பாரத மதம்

நான் உழைக்கும் வர்க்கம்
இலவச டீவியில் இலவசத்தை
அனுபவிக்கும் கூட்டமல்ல ..

மோட்டா குடிகாரன்
மோட்டார் வண்டியில் சென்று
எதிரேவருபவனை கொன்று
எமனை தானே அழைத்துகொண்டு
மடிபவனுக்கு நீ கண்ணீர் விட்டு
என்ன பயன்?

குடியானவன் தான்
கோவிலையே பாராமரிக்கிறார்கள்
இது தெரியாத உனை என்ன சொல்வது?

தப்பையே தொழிலாக செய்துக்கொண்டு
இருக்கும் சிலநபர்களால்
என் தேசத்தை குறைசொல்ல
எவனுக்கும் தகுதியில்லை.

என்தேசத்திலேயே எனக்கு
எல்லைவகுக்கும் தேசவிரோத
கூட்டங்களால் தான்
இந்த கோஷங்கள்

உலகத்தில் சாதி,மத,நிற
பாகுபாடில்லாத நாட்டைக்காட்டு.

வெமூலாக்களும்,கன்ஹயாகளும்
சாதி சொல்லி அனுபவிக்கும் சலுகைகளை
ஏற்பதை மறுக்க சொல்! சாதி அழியும்.

பாரத தாயும் நானும் ஒரே மதம்
பாரத மதம். பாரதத்திற்கே சொந்தமான மதம்..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (8-Mar-16, 8:00 am)
Tanglish : bharatha matham
பார்வை : 728

மேலே