சுரண்டல்
வற்றாத ஜீவநதியாய்
ஓடவேண்டும் என
நினைத்துதான்
காவேரி, கங்கை
என நதிகளுக்கு
பெயர் சூட்டினர்...
அதனால்தானோ என்னவோ
மணல் கொள்ளை என
அன்றாடம் நதிகள்
சுரண்டப்படுகின்றன....
பெண்களைப்போலவே
எதிர்க்க திராணியின்றி
சாலையெங்கும்
லாரிகளிலிலிருந்து
கண்ணீ்ர் வடித்தப்படி
ஊர்வலமாய் செல்கிறது
ஆற்று மணல்...