மகளிர் தின வாழ்த்துக்கள் ~ சகா
வீட்டில்
அடமானம் வைத்த
விட்டில்களாய்...
உறவெனும்
உரலில் தலை
கொடுத்து...
சமூக வலையில்
மாட்டிய
மீன்களாய்...
புயலில்
சிக்கி மடல்களை
இழந்த பூவின்
காம்பாய் செடியினில்
வளர்ந்து...
வாழ் நாள்
சாதனைக்கு
வாழும் நாளை
சோதனையாக்கி...
முறை வாசல்
முதல்
பிறை வாசல்
வரை...
அடுக்களையில்
ஆரம்பித்து
அணு உலை
வரையிலும்...
அரிசியில் கல்
எடுத்தும்
அரசியலில் கால்
பதித்தும்...
கணவன்
முதல்
கணினி
வரையில்...
வேதனைகளை
சாதனையாக்கி
சங்கடங்களை
சருகாக்கி...
வெற்றிப்படி
ஏறும்...
அன்னையரே...
சகோதரிகளே...
தோழிகளே...
உங்கள் அனைவருக்கும்
சகாவின்
மனம் திறந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...!!!